1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

‌சி‌றில‌ங்கா படை‌யின‌ரி‌ன் தா‌க்குத‌ல் முய‌ற்‌சி மு‌றியடி‌ப்பு!

இல‌ங்கை யா‌ழ்‌ப்பாண‌ம்
இல‌ங்கை‌யி‌ல் யா‌ழ்‌ப்பாண‌ம், ‌கிளா‌லி, முகமாலை, நாக‌ர்கோ‌வி‌ல் உ‌ள்‌ளி‌ட்ட பகு‌திக‌ளி‌ல் பு‌‌லிக‌ளி‌ன் ‌நிலைக‌ளி‌ன் ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்த வ‌ந்த ‌சி‌றில‌ங்க ராணுவ‌த்‌தின‌ரி‌ன் மு‌ய‌ற்‌சி மு‌றியடி‌க்க‌ப்ப‌ட்டதா‌க பு‌லிக‌‌ள் தர‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ஆ‌ர்‌ட்டிலே‌றி, இய‌ந்‌திர‌த் து‌ப்பா‌க்‌கிக‌ளி‌ன் உத‌வியுட‌ன் இ‌ன்று அ‌‌திகாலை 1 ம‌ணி‌க்கு ‌சி‌றில‌ங்கா ராணுவ‌த்‌தின‌ர் த‌ங்க‌ளி‌ன் தா‌க்குத‌ல் நடவடி‌க்கையை‌த் துவ‌ங்‌கியு‌ள்ளன‌ர். இதையடு‌த்து சுதா‌ரி‌த்த பு‌லிக‌ள் உடனடியாக கடு‌ம் எ‌தி‌ர்‌த்தா‌க்குத‌ல் நட‌த்‌தின‌ர்.

இதை‌ச் சமா‌ளி‌க்க முடியாத ராணுவ‌த்‌தின‌ர் த‌ங்க‌ள் ‌நிலைகளு‌க்கு‌ப் ‌பி‌ன்வா‌ங்‌கின‌ர். ராணுவ‌த்‌தின‌ர் ‌வி‌ட்டு‌ச் செ‌‌ன்ற எ‌றிகணைக‌ள், து‌‌ப்பா‌க்‌கிக‌ள் உ‌ள்‌ளி‌ட்ட ஆ‌யுத‌ங்களை பு‌லிக‌ள் கை‌ப்ப‌‌ற்‌றி உ‌ள்ளதாக‌த் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.