1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

‌சீனா‌வி‌ல் 44,000 ஆபாச இணைய தள‌ங்களு‌க்கு‌த் தடை!

இணைய தள‌‌ம் ஆபாச‌ம் ‌சீன அரசு தடை 868 பே‌ர் கைது 1
இணைய தள‌த்‌தி‌ல் ஆபாச‌த்தை ஒ‌ழி‌க்கு‌ம் நடவடி‌க்கை‌யி‌ல் ஒரு பகு‌தியாக, கட‌ந்த ஆ‌ண்டு 44,000 ஆபாச இணைய தள‌ங்களை‌ச் ‌சீன அரசு தடை செ‌ய்து‌ள்ளது.

மேலு‌ம், இணைய தள‌த்‌தி‌ல் ப‌ரிமா‌றி‌க் கொ‌ள்ள‌ப்ப‌ட்ட 4,40,000 ஆபாச‌த் தகவ‌ல்க‌ள் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு ‌நீ‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. இது தொட‌ர்பாக 868 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌‌ள்ளன‌ர். 1,911 பேரு‌க்கு அபராத‌ம் ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது. 524 பே‌ரிட‌ம் ‌விசாரணை நட‌ந்து வரு‌கிறது.

இளைஞ‌ர்க‌ளிடை‌யி‌ல் இணைய தள‌ங்க‌ளி‌ன் பய‌ன்பாடு அ‌திக‌ரி‌த்து வரு‌ம் ‌நிலை‌யி‌லு‌ம், வரு‌கிற ஆக‌ஸ்‌ட் மாத‌ம் பெ‌ய்‌ஜி‌ங்‌கி‌ல் தொட‌ங்கவு‌ள்ள ஒ‌லி‌‌ம்‌பி‌க் போ‌ட்டிகளை மு‌ன்‌னி‌ட்டு ல‌ட்ச‌க்கண‌‌க்கான அய‌ல்நா‌ட்டவ‌ர்க‌ள் ‌சீனா‌வி‌ற்கு வரவு‌ள்ளன‌ர் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படுவதாலு‌ம், இ‌ந்நடவடி‌க்கை எடு‌க்க‌ப்ப‌‌ட்டு வருவதாக ‌சீன பாதுகா‌ப்பு அமை‌ச்சக‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வரு‌கிற செ‌ப்ட‌ம்ப‌ர் மாத‌ம் வரை, ஆபாச இணைய தள‌ங்களை ஒ‌ழி‌க்கு‌ம் நடவடி‌க்கை ‌தீ‌விரமாக எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம், செ‌ல்பே‌சிக‌ளி‌ல் ஆபாச‌ப் பட‌ங்களை வை‌த்‌திரு‌ந்தாலு‌ம் கடு‌ம் நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் ‌சீன அ‌திகா‌ரிக‌ள் எ‌ச்ச‌ரி‌த்துள்ளன‌ர்.