1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் பய‌ங்கரவா‌திக‌ள் தா‌க்குத‌ல்: 5 ராணுவ‌த்‌தின‌ர் ப‌லி!

பா‌கி‌ஸ்தா‌‌‌ன் தெ‌ற்கு வ‌சி‌ரி‌ஸ்தா‌ன் ராணுவ முகா‌‌ம் லாடா கோ‌ட்டை அ‌த்த‌ர் அ‌ப்பா‌ஸ் பைது‌ல்லா மசூ‌த்‌
பா‌கி‌ஸ்தா‌னி‌‌ன் தெ‌ற்கு வ‌சி‌ரி‌ஸ்தா‌ன் பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள ராணுவ முகா‌மி‌ன் ‌மீது இ‌ன்று அ‌திகாலை பய‌ங்கரவா‌திக‌ள் நட‌த்‌திய தா‌க்குத‌லி‌ல் 5 ராணுவ‌த்‌தின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

லாடா கோ‌ட்டை எ‌ன்ற இட‌த்‌தி‌ல் உ‌ள்ள ராணுவ முகா‌மி‌ன் ‌மீது பய‌ங்கரவா‌திக‌ள் த‌ங்க‌ள் முத‌ல் தா‌க்குதலை‌த் தொட‌ங்‌கியதாகவு‌ம், ராணுவ‌த்‌தின‌ர் நட‌த்‌திய ப‌தி‌ல் தா‌க்குத‌லி‌ல் பய‌ங்கரவா‌திக‌ள் ‌பி‌ன்வா‌ங்‌கியதாகவு‌ம் ராணுவ‌ச் செ‌ய்‌தி‌த் தொட‌ர்பாள‌ர் அ‌த்த‌ர் அ‌ப்பா‌ஸ் கூ‌றினா‌ர்.

தெஹ‌்‌ரி‌க் இ த‌லிபா‌ன் எ‌ன்ற ‌தீ‌விரவாத அமை‌ப்‌பி‌ன் தளப‌தியு‌ம், அ‌ல் க‌ய்டா இய‌க்க‌த்‌தி‌ன் துணை‌த் தளப‌தியுமான பைது‌ல்லா மசூ‌த்‌தி‌ற்கு இ‌த்தா‌க்குத‌லி‌ல் தொட‌ர்பு இரு‌க்கலா‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.