1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

அமெ‌ரி‌க்க வா‌க்காள‌‌ர் ப‌திவு ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் குஜரா‌த்‌‌தி‌ மொ‌ழி‌யி‌ல் வெ‌ளி‌யீடு!

அமெ‌ரி‌க்க ‌நியூ ஜெ‌ர்‌சி குஜரா‌த்‌தி மொ‌ழி‌ வா‌க்காள‌ர் பதிவு ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள்
அமெ‌ரி‌க்க வரலா‌ற்‌றி‌ல் முத‌ல் முறையாக ‌நியூ ஜெ‌ர்‌சி மாகாண‌த்‌தி‌ல் வா‌க்காள‌ர் பதிவு ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் குஜரா‌த்‌தி மொ‌ழி‌யி‌ல் உருவா‌க்க‌ப்‌ப‌ட்டு பய‌ன்பா‌ட்டு‌க்கு வ‌‌ந்து‌ள்ளது.

‌நியூ ஜெ‌ர்‌சி‌யி‌ல் அ‌திக எ‌ண்‌ணி‌க்கை‌யி‌ல் வ‌சி‌க்கு‌ம் குஜரா‌த்‌தி ம‌க்க‌ளி‌ன் வச‌தியை‌க் கரு‌த்‌தி‌ல் கொ‌ண்டு அ‌றிமுக‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள இ‌‌ப்பு‌திய ‌தி‌ட்ட‌த்‌தினா‌ல், அமெ‌ரி‌க்க தே‌ர்த‌ல் வரலா‌ற்‌றி‌ல் முத‌ன் முதலாக இட‌ம்பெ‌ற்ற தெ‌ற்கா‌சிய மொ‌ழி எ‌ன்ற பெருமையை குஜரா‌த்‌தி பெ‌ற்று‌ள்ளது.

அமெ‌ரி‌க்கா‌வி‌ல் குடியு‌ரிமையுட‌ன் வ‌ழிவ‌ழியாக வ‌சி‌த்துவரு‌ம் தெ‌ற்கா‌சிய நாடுகளை‌ச் சே‌ர்‌ந்த ம‌க்க‌ள் போதுமான அளவு ஆ‌ங்‌கில‌ப் புலமை இ‌ல்லாம‌ல் உ‌ள்ளன‌ர்.

இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ல் பெரு‌ம்பாலானவ‌ர்களு‌ம், வ‌ங்கதேச‌‌த்தை‌ச் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ளி‌ல் ச‌ரிபா‌தி‌ப் பேரு‌ம், பா‌கி‌ஸ்தா‌னிய‌ர்க‌ளி‌ல் மூ‌ன்‌‌றி‌ல் ஒரு ப‌ங்‌கினரு‌ம் இ‌ச்‌சி‌க்க‌லி‌ல் உ‌ள்ளன‌ர்.

இதனா‌ல், அனைவரு‌க்கு‌ம் பு‌ரியு‌ம் வகை‌யி‌ல் தே‌ர்த‌‌ல் ஆவண‌ங்களை மொ‌ழிமா‌ற்ற‌ம் செ‌ய்ய வே‌‌‌ண்டு‌ம் எ‌ன்று கோ‌ரி‌க் கட‌ந்த 2003 ஆ‌ம் ஆ‌ண்டு முத‌ல் ஆ‌சிய அமெ‌ரி‌க்க ச‌ட்ட‌ப் பாதுகா‌ப்பு ம‌ற்று‌ம் க‌ல்‌‌வி‌க் கழக‌ம், தெ‌ற்கு ஆ‌சிய அமெ‌ரி‌க்க ஒ‌ன்றுப‌ட்ட மு‌ன்ன‌‌ணி உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு அமை‌ப்புக‌ள் ‌பிர‌ச்சார‌ம் செ‌ய்து வ‌ந்தன.

த‌ற்போது குஜரா‌த்‌தி மொ‌ழி‌யி‌ல் வா‌க்காள‌ர் ப‌திவு ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் ‌கிடை‌ப்பது கு‌றி‌த்து இ‌வ்வமை‌ப்புக‌ள் ‌விடு‌த்து‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், "தே‌ர்த‌ல் நடவடி‌க்கைகளு‌க்கு மொ‌ழி ஒரு தடையாக இரு‌க்க‌க் கூடாது. தே‌ர்த‌ல் ஆவண‌ங்க‌ள் மொ‌ழிமா‌ற்ற‌ம் செ‌ய்ய‌ப்ப‌டுவதா‌ல், எ‌ல்லா ம‌க்களு‌ம் த‌ங்க‌ள் அர‌சிய‌ல் கடைமையை முழுமையாக ‌‌நிறைவே‌ற்ற வ‌ழி ‌பிற‌ந்து‌ள்ளது" எ‌ன்று கூ‌றியு‌ள்ளன.

இ‌வ்வா‌ண்டு இறு‌தி‌யி‌ல் நட‌க்கவு‌ள்ள அ‌திப‌ர் தே‌ர்த‌லி‌ல் பு‌திய ‌வி‌ண்ண‌ப்பங்க‌‌ள் பய‌ன்படு‌த்த‌ப்படு‌ம்.