1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

வெ‌னிசுலா ‌விமான ‌விப‌த்‌தி‌ல் 14 பே‌ர் ப‌லி!

வெ‌னிசுலா ‌விமான ‌விப‌த்‌து
வெ‌‌னிசுலா‌வி‌ல் சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ள் செ‌ன்ற ‌விமான‌ம் ஒ‌ன்று ‌கீழே ‌விழு‌ந்து நொறு‌ங்‌கிய‌தி‌ல் 14 பே‌ர் ப‌லியா‌யின‌ர்.

வெ‌னிசுலா நா‌ட்டி‌ன் கராக‌ஸ் ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் இரு‌ந்து இ‌த்தா‌லி ம‌‌ற்று‌ம் சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து நா‌ட்டு‌ப் பய‌ணிக‌ள் 14 பேருட‌ன் சு‌ற்றுலா ‌விமான‌ம் ஒ‌ன்று நே‌ற்று மாலை புற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த ‌விமான‌ம் புக‌ழ்பெ‌ற்ற லா‌ஸ் ரா‌க்‌ஸ் ‌தீவு‌க்கு அரு‌கி‌ல் பற‌ந்து கொ‌ண்டிரு‌ந்த போது தரை‌‌யி‌ல் ‌விழு‌ந்து நொறு‌ங்‌கியதாக‌த் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌‌க்‌கி‌ன்றன.

இ‌ந்த ‌விப‌த்‌தி‌ல், ‌விமான‌த்‌தி‌ல் பயண‌ம் செ‌ய்த அனைவரு‌ம் ப‌லியா‌கி‌வி‌ட்டதாக கருத‌ப்படு‌கிறது. ‌விமான ‌சிதற‌ல்களை‌த் தேடு‌ம் ப‌ணி‌யி‌ல் ஹெ‌‌லிகா‌ப்ட‌ர்க‌ள் ஈடுப‌ட்டு‌ள்ளன.

‌விமான‌த்‌தி‌ல் வெ‌னிசுலாவை‌ச் சே‌ர்‌ந்த 5 பைல‌ட்டுக‌ள் இரு‌ந்ததாகவு‌ம், அவ‌ர்களை‌ப் ப‌ற்‌றிய ‌விவர‌ங்க‌ள் எதுவு‌ம் உடனடியாக‌த் தெ‌ரிய‌வி‌ல்லை எ‌ன்று‌ம் வெ‌னிசுலா அ‌‌திகா‌ரிக‌ள் கூ‌‌றியு‌‌ள்ளன‌ர்.