1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

ம‌க்களை‌ப் பாதுகா‌‌த்த ஒ‌ப்ப‌ந்த‌ம் மு‌றிந்து‌வி‌ட்டது: நா‌ர்‌டி‌க் நாடுக‌ள்!

நா‌ர்வே
போ‌‌ர் ‌நிறு‌த்த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல் இரு‌ந்து ‌சி‌றில‌ங்க அரசு வெ‌ளியே‌றியத‌ன் மூல‌ம் அ‌ப்பா‌வி ம‌க்களை‌ப் பாதுகா‌த்த ஒ‌ப்ப‌ந்த‌ம் மு‌றி‌ந்து ‌வி‌ட்டது எ‌ன்று நா‌ர்வே, ‌ஸ்‌வீட‌ன், டெ‌ன்மா‌ர்‌க், ஃ‌பி‌ன்லா‌ந்து, ஐ‌ஸ்லா‌ந்து ஆ‌கிய நா‌ர்டி‌க் நாடுக‌‌ள் கவலை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன.

இதுகு‌றி‌த்து அ‌ந்நாடுக‌ளி‌ன் அயலுறவு அமை‌ச்ச‌ர்க‌ள் கூ‌ட்டாக வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல் கூ‌றி‌யிரு‌ப்பதாவது:

‌சி‌றில‌ங்கா‌வி‌‌‌ல் ‌நிலவு‌ம் மோசமான சூ‌ழ்‌‌நிலை கு‌றி‌த்து நா‌ர்டி‌க் நாடுக‌ள் கவலை கொ‌ண்டு‌ள்ளன. வ‌ன்முறைக‌ளி‌ன் ஒ‌ட்டுமொ‌த்த ‌விளைவுகளு‌ம் த‌ற்போது ஒரு பு‌ள்‌ளியை அடை‌ந்து‌ள்ளது. அதாவது போ‌ர் ‌‌நிறு‌த்த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல் இரு‌ந்து ஒருதர‌ப்பு ம‌ட்டு‌ம் வெ‌ளியே‌றி உ‌ள்ளது.

‌சி‌றில‌ங்கா அரசு‌ம் ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌ம் ‌தீ‌விரமான மோத‌ல்க‌ளி‌ல் ஈடுப‌ட்டுவரு‌ம் ‌நிலை‌யி‌ல், இ‌ந்த நெரு‌க்கடி ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. இல‌ங்கை‌யி‌ல் ‌நிலவு‌ம் மோத‌ல்க‌ள், அ‌திக உ‌யி‌ரிழ‌ப்புக்களையு‌ம், தொட‌ர்‌ச்‌சியான ம‌னித உ‌ரிமை ‌மீற‌ல்களையு‌ம் ஏ‌ற்ப‌டு‌த்‌தி வருவது கவலை அ‌ளி‌க்‌கிறது.

கட‌ந்த 2002 ஆ‌‌ம் ஆ‌ண்டு உருவா‌க்க‌ப்‌ப‌ட்ட போ‌ர் ‌நிறு‌த்த ஒ‌ப்ப‌ந்த‌‌ம் 6 ஆ‌ண்டுக‌ள் ‌நீடி‌த்து‌ள்ளது. இ‌ந்த ஒ‌ப்ப‌ந்த‌ம், அமை‌தி முய‌ற்‌சிகளு‌க்கு‌ம், இல‌ங்கை‌யி‌ன் அமை‌தி முய‌ற்‌சிக‌ளி‌ல் ச‌ர்வதேச நாடுக‌‌‌ளி‌ன் ப‌ங்க‌ளி‌ப்பிற்க்கு‌ம் அடி‌‌ப்படையாக ‌விள‌ங்‌கியது.

இருதர‌ப்‌பி‌ன் வே‌ண்டுகோளு‌க்‌கு இண‌ங்க போ‌ர் ‌நிறு‌த்த‌த்தை‌க் க‌ண்கா‌‌ணி‌க்கு‌ம் பொது அமை‌ப்பை நா‌ர்டி‌க் நாடுக‌ள் உருவா‌க்‌கியது. மோத‌ல்களை ‌நிறு‌த்‌தி இய‌ல்பு ‌நிலையை உருவா‌க்குவதே இ‌ந்த‌‌க் குழு‌வி‌ன் நோ‌க்கமாகு‌ம்.

போ‌ர் ‌நிறு‌த்த ஒ‌ப்ப‌ந்த‌ம் பல ந‌ல்ல ‌விளைவுகளை ஏ‌ற்படு‌த்‌தியது. ஒ‌ப்ப‌ந்த‌ம் ஏ‌ற்ப‌ட்ட முத‌ல் ஆ‌ண்டிலேயே, மோத‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் இழ‌ப்புக‌ள் ஏற‌த்தாழ அறவே இ‌ல்லை எ‌ன்ற ‌நிலை ஏ‌ற்ப‌ட்டது. சுமா‌ர் 10,000 உ‌யி‌ர்க‌ள் கா‌ப்பா‌ற்ற‌ப்ப‌ட்டன.

இ‌ந்த ஒ‌ப்ப‌ந்த‌ம், ம‌க்க‌‌ள் சுத‌‌ந்‌திரமாக நடமாடுவத‌ற்கு வ‌ழி ஏ‌ற்படு‌த்‌தியதுட‌ன், பொருளாதார மே‌ம்பா‌ட்டி‌ற்கு‌ம் வா‌ய்‌ப்ப‌ளி‌த்தது. ம‌னித உ‌ரிமை ‌மீற‌ல்க‌ள் தடு‌த்து ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டு பொதும‌க்க‌ள் கா‌ப்பா‌ற்ற‌ப்ப‌ட்டன‌ர்.

இ‌ந்‌நிலை தொட‌ர்‌ந்து ‌‌நீடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்பது‌ம் உ‌ண்மை. ஒ‌ப்ப‌ந்‌த‌த்தை ‌மீறு‌ம் வ‌ன்முறைக‌ள் ‌பி‌ன்ன‌ர் அ‌திக‌ரி‌த்தன. கட‌ந்த 2 ஆ‌ண்டுகளாக ஒ‌ப்ப‌ந்த‌ம் முழுமையாக‌ப் ‌பி‌ன்ப‌ற்ற‌ப்ப‌ட‌வி‌ல்லை.

ஆனா‌ல், த‌ற்போது ‌சி‌றில‌ங்கா அரசு மே‌ற்கொ‌ண்டு‌ள்ள முடி‌வினா‌ல் வ‌ன்முறைக‌ள் உ‌ச்சக‌ட்ட‌த்தை அடையலா‌ம் எ‌ன்று நா‌ர்டி‌க் நாடுக‌ள் கவலை கொ‌ண்டு‌ள்ளன.

போ‌ர் ‌நிறு‌த்த‌க் க‌ண்கா‌ணி‌ப்பு‌க் குழு‌வின‌ர் வெ‌ளியேறுவது எ‌ன்பது, ம‌க்களை‌ப் பாதுகா‌‌க்கு‌ம் ஒ‌ப்ப‌ந்த‌ம் மு‌‌றி‌‌ந்து போனத‌ற்கு இணையானது.

இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வே சாத்திய‌ம் எ‌ன்ப‌தி‌ல் நார்டிக் நாடுகள் நம்பிக்கை கொண்டுள்ளன.

இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில் பணியாற்றிய ச‌ர்வதேச மற்றும் உள்ளூர் கண்காணிப்பாளர்களுக்கு நார்டிக் நாடுகள் நன்றி தெரிவித்து கொள்கின்றன.

இ‌வ்வாறு அ‌ந்த அ‌றி‌க்கை‌யி‌ல் கூற‌‌ப்ப‌ட்டு‌ள்ளது.