1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

‌சி‌றில‌ங்கா‌வி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு: 4 ராணுவ‌த்‌தின‌ர் ப‌லி!

சி‌றில‌ங்கா பேரு‌ந்‌து கு‌ண்டுவெடி‌ப்பு ராணுவ‌த்‌‌தின‌ர் பல‌ர் படுகாய‌ம் ‌நி‌ப்பா‌ன் ‌விடு‌தி
சி‌றில‌ங்கா தலைநக‌ர் கொழு‌ம்‌பி‌ல் ராணுவ‌த்‌தினரை ஏ‌ற்‌றிவ‌ந்த பேரு‌ந்‌து ஒ‌ன்று ச‌க்‌திவா‌ய்‌ந்த கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் ‌சி‌‌க்‌கியதாக அ‌ந்நா‌ட்டு பாதுகா‌ப்பு அ‌‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். இ‌த் தா‌க்குத‌லி‌ல் 4 ராணுவ‌த்‌‌தின‌ர் ப‌லியானதாகவு‌ம், பல‌ர் படுகாய‌ம் அடை‌ந்ததாகவு‌ம் முத‌ல் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

‌நி‌ப்பா‌ன் எ‌ன்ற த‌ங்கு‌ம் ‌விடு‌தி அரு‌கி‌‌ல் இ‌ன்று அ‌திகாலை இ‌த் தா‌க்குத‌ல் நட‌ந்தது. இத‌ி‌ல் ‌விடு‌தி கடுமையாக சேத‌ம் அடை‌ந்தது. மேலு‌ம் ‌விவர‌ங்க‌ள் எதுவு‌ம் உடனடியாக‌த் தெ‌ரிய‌வி‌ல்லை எ‌ன்று‌ம் தே‌சிய‌ப் பாதுகா‌ப்பு செ‌ய்‌தி அலுவலக‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.