1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

இ‌ந்‌தியாவு‌க்கு யுரே‌னிய ‌வி‌ற்பனை: ஆ‌ஸ்‌ட்ரே‌லிய எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி தலைவ‌ர் கோ‌ரி‌க்கை!

இ‌ந்‌தியா யுரே‌னிய‌ம் ஆ‌ஸ்‌ட்ரே‌லியா தொ‌ழிலாள‌ர் க‌ட்‌சி ‌பிரெ‌ன்ட‌ன் நெ‌ல்ச‌ன் ஜா‌ன் ஹவா‌ர்‌ட் கெ‌வி‌ன் ரூ‌ட்
இ‌ந்‌தியா‌வி‌ற்கு யுரே‌னிய‌ம் ‌வி‌ற்பனை செ‌ய்வத‌ற்கு ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ல் ஆளு‌ம் தொ‌ழிலாள‌ர் க‌ட்‌சி அரசு அனும‌தி‌க்க வே‌ண்டு‌‌ம் எ‌ன்று அ‌ந்நா‌ட்டு எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌யான ‌லிபர‌ல் க‌ட்‌‌சித் தலைவ‌ர் ‌பிரெ‌ன்ட‌ன் நெ‌ல்ச‌ன் கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

"இ‌ந்‌தியா தனது அ‌திக‌ரி‌த்துவரு‌ம் எ‌‌ரிச‌க்‌தி‌த் தேவைகளை ‌நிறைவு செ‌ய்வத‌ற்கான முய‌ற்‌சிகளை எடு‌க்கை‌யி‌ல், பசுமை இ‌ல்ல வாயு‌‌க்க‌ள் அ‌திக அள‌வி‌ல் வெ‌‌ளியா‌கி‌ன்றன.

இதனா‌ல் இ‌ந்‌தியா‌வி‌ற்கு நா‌ம் யுரே‌னிய‌த்தை ‌வி‌ற்பனை செ‌ய்வத‌ன் மூல‌ம், பருவ‌நிலை‌யி‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள பா‌தி‌ப்புகளை‌‌க் குறை‌க்க முடியு‌ம்" எ‌ன்று நெ‌ல்ச‌ன் கூ‌றினா‌ர்.

ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ல் மு‌ன்பு ஆ‌ட்‌சி‌யி‌லிரு‌ந்த ‌‌லிபர‌ல் க‌ட்‌சி‌ப் ‌பிரதம‌ர் ஜா‌ன் ஹவா‌ர்‌ட், எ‌ரிச‌க்‌தி‌த் தேவைகளு‌‌க்கு ம‌ட்டு‌ம் பய‌ன்படு‌த்துவதாக இரு‌ந்தா‌ல் ‌நிப‌ந்தனை‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ற்கு யுரே‌னிய‌ம் ‌வி‌ற்க‌த் தயா‌ர் எ‌ன்று கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

அ‌து‌வு‌ம், இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் நடைமுறை‌க்கு வ‌ந்தவுட‌ன்தா‌ன் யுரே‌னிய ச‌ப்ளையை‌த் தொட‌ங்க முடியு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

ஆனா‌ல், ‌பி‌ன்ன‌ர் ஆ‌ட்‌சி‌க்கு வ‌ந்த தொ‌ழிலாள‌ர் க‌ட்‌சி‌ ‌பிரதம‌ர் கெ‌வி‌ன் ரூ‌ட் அ‌ந்த முடி‌வி‌லிரு‌ந்து ‌பி‌ன்வா‌ங்‌கி‌ வி‌ட்டா‌ர். அணுஆயுத‌ப் பரவ‌ல் தடை‌ச் ச‌ட்ட‌த்‌தி‌ல் கையெழு‌த்‌தி‌ட்டா‌ல் ம‌ட்டுமே யுரே‌னிய ‌வி‌ற்பனை சா‌த்‌திய‌ம் எ‌ன்று கூ‌றி‌யு‌ள்ளா‌ர்.