1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

இல‌ங்கை‌யி‌ல் மழை வெ‌ள்ள‌த்தா‌ல் 30,000 பே‌ர் இட‌ம்பெய‌ர்வு!

இல‌ங்கை மழை வெ‌ள்ள‌‌ம் இட‌ம்பெய‌ர்வு
இல‌ங்கை‌‌யி‌ல் தொட‌ர்‌ந்து பெ‌‌ய்துவரு‌‌ம் மழை‌யினா‌ல் ஏ‌‌ற்ப‌ட்டு‌ள்ள வெ‌ள்ள‌த்‌தி‌‌ன் காரணமாக ‌கிழ‌க்கு ம‌ட்ட‌க்கள‌ப்பு ம‌ற்று‌ம் அ‌ம்பாறை மாவ‌ட்ட‌த்‌தி‌ல் வ‌சி‌க்கு‌ம் 30,000 பே‌ர் பாதுகா‌ப்பான பகு‌திகளு‌க்கு இட‌ம்பெய‌ர்‌ந்து‌ள்ளன‌ர்.

அ‌ம்பாறை‌யி‌ல் 2,000 பேரு‌ம், ம‌ட்ட‌க்கள‌ப்‌பி‌ல் 23,000 பேரு‌ம் இட‌ம்பெய‌ர்‌ந்து உ‌ள்ளதாகவு‌ம், அவ‌ர்களு‌க்கு‌த் தேவையான உணவு, உறை‌விட வச‌திக‌ள் செ‌ய்து கொடு‌க்க‌ப்ப‌ட்டு உ‌‌ள்ளன எ‌‌‌‌‌ன்று‌‌ம் ‌சிறல‌ங்க அர‌சி‌ன் பே‌ரிட‌ர் மேலா‌ண்மை அமை‌ச்சக‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இல‌ங்கை‌யி‌ல், மே முத‌ல் செ‌ப்ட‌ம்ப‌ர் வரை ‌நீடி‌க்கு‌ம் தெ‌ன்மே‌ற்கு‌ப் பருவமழை, டிச‌ம்ப‌‌ர் முத‌ல் ‌பி‌ப்ரவ‌ரி வரை ‌நீடி‌க்கு‌ம் வட‌கிழ‌க்கு‌ப் பருவமழை ஆ‌கியவ‌ற்றா‌ல் வெ‌ள்ள‌ப் பெரு‌க்கு ஏ‌ற்படுவது‌ம், பொதும‌க்க‌ள் பாதுகா‌ப்பான இட‌ங்களு‌க்கு இட‌ம்பெய‌ர்வ‌து‌ம் வழ‌க்கமா‌கி உ‌ள்ளது.

கு‌றி‌ப்பாக வேளா‌ண் தொ‌ழிலு‌க்கு‌ப் பெய‌ர்பெ‌ற்ற அ‌ம்பாறை மாவ‌ட்ட‌ம் ‌மிகவு‌ம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது. சுமா‌ர் 400 ஏ‌க்க‌ர் நெ‌ல் வய‌ல்க‌ளி‌‌ல் 2 அடி ஆழ‌த்‌தி‌ற்கு வெ‌ள்ள‌நீ‌ர் ‌‌நி‌ற்பதாக அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌‌த்தன‌ர்.

நுவாரா எ‌லியா மாவ‌ட்ட‌த்‌‌தி‌ல் மலை‌ப் பகு‌திக‌ளி‌ல் உ‌ள்ள தே‌யிலை‌த் தோ‌ட்ட‌ங்க‌ளி‌ல் ம‌ண்ச‌ரிவு ஏ‌ற்ப‌ட்டு பாதைக‌ள் அடைப‌ட்டு‌ள்ளன. 80 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ‌கிராம‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள ‌வீடுக‌ள் சேதமடை‌ந்து‌ள்ளன.