1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

இல‌ங்கை‌யி‌ல் கடு‌ம் மோத‌ல் : 27 பே‌ர் ப‌‌லி!

இல‌ங்கை மோத‌ல் ‌விடுதலை‌ப் பு‌லிகள் ‌சி‌றி‌ல‌ங்க ராணுவ‌ம்
இல‌ங்கை‌யி‌ன் வட‌க்கு‌ப் பகு‌தி‌யி‌ல் ‌சி‌றி‌ல‌ங்க ராணுவ‌த்து‌க்கு‌ம் ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம் இடை‌யி‌ல் நட‌ந்த கடுமையான மோத‌லி‌ன் இறு‌தி‌யி‌‌ல் இர‌ண்டு தர‌ப்‌பிலு‌ம் 27 பே‌ர் ப‌லியானதாக அ‌ந்நா‌ட்டு பாதுகா‌ப்பு அமை‌ச்சக‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

கட‌ந்த 2 நா‌ட்க‌ளி‌ல் யா‌‌ழ்‌பாணத்‌தி‌ல் முகமாலை உ‌ள்‌ளி‌ட்ட 2 இட‌ங்க‌ளி‌ல் நட‌ந்த மோத‌லி‌ல் 3 பு‌லிக‌ள் கொ‌ல்ல‌‌ப்ப‌ட்டன‌ர் எ‌ன்று‌ம், வவு‌னியா‌வி‌ல் ‌விளா‌த்‌திகுள‌ம் பகு‌தி‌யி‌ல் நட‌ந்த மோத‌லி‌ல் 7 பு‌லிக‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர் எ‌ன்று‌ம் ராணுவ‌ம் கூ‌றியு‌ள்ளது.

இதேபோல ம‌ன்னா‌‌‌‌ர் மாவ‌ட்ட‌ம் உ‌‌‌யில‌‌ங்குள‌த்‌தி‌ல் நட‌ந்த மோத‌லி‌ல் 4 பு‌லிகளு‌ம், ஆத‌ம்ப‌னி‌ல் நட‌ந்த மோத‌லி‌ல் 5 பு‌லிகளு‌ம், வ‌ன்‌னி‌யி‌ல் நட‌ந்த மோத‌ல்க‌ளி‌ல் 7 பு‌லிகளு‌ம் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர் எ‌ன்று ராணுவ‌ம் கூ‌றியு‌ள்ளது.

இ‌ந்த மோத‌ல்க‌ளி‌ல் ராணுவ‌த்‌ தர‌ப்‌பி‌ல் ஒருவ‌ர் ம‌ட்டுமே ப‌லியானா‌ர் எ‌ன்று‌ம், ‌சில தகவ‌ல்க‌ள் தாமதமாக‌க் ‌கிடை‌த்தவை எ‌ன்று‌ம் பாதுகா‌ப்பு அமை‌ச்சக‌ம் தனது அ‌றி‌க்கை‌யி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.