1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் அவசர ‌நிலை இ‌ன்று ர‌த்தா‌கிறது!

பா‌கி‌ஸ்தா‌‌ன் அவசர ‌நிலை வழ‌க்க‌றிஞ‌ர் மா‌லி‌க் ப‌ர்வே‌ஷ் முஷாரஃ‌ப்
பா‌கி‌ஸ்தா‌னி‌‌‌ல் ‌பிரகடன‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள அவசர ‌நிலையை ர‌த்து செ‌ய்வத‌ற்கான உ‌த்தரவை அ‌திப‌ர் ப‌ர்வே‌ஷ் முஷாரஃ‌ப் இ‌ன்று ம‌திய‌ம் 1 ம‌ணி‌க்கு ‌பிற‌ப்‌பி‌ப்பா‌ர் எ‌ன்று அரசு தலைமை வழ‌க்க‌றிஞ‌ர் மா‌லி‌க் கையூ‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுதொட‌ர்பாக செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் அவ‌ர் கூறுகை‌யி‌ல், "அவசர ‌நிலை‌ப் ‌பிரகட‌ன‌‌ம் ர‌த்து செ‌ய்ய‌ப்படு‌ம் நேர‌த்‌தி‌ல், இடை‌க்கால அர‌சிய‌ல் ச‌ட்ட‌ங்க‌ளு‌ம் ர‌த்தா‌கி அர‌சிய‌ல் அமை‌ப்பு‌ச் ச‌ட்ட‌ம் அமலு‌க்கு வரு‌ம்.

இதையடு‌த்து, இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் அமை‌ப்பத‌ற்கான உ‌த்தர‌விலு‌ம், அ‌ண்மை‌யி‌‌ல் பத‌‌வி ‌நீ‌க்க‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்ட உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌திகளு‌க்கு ஓ‌ய்வூ‌திய‌ம் வழ‌ங்குவத‌ற்கான உ‌த்தர‌விலு‌ம் அ‌திப‌ர் முஷாரஃ‌ப் கையெழு‌த்‌திடு‌கிறா‌ர்.

பு‌திதாக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌நீ‌திப‌திக‌ள், அர‌சிய‌ல் அமை‌ப்பு‌ச் ச‌ட்ட‌ம் அமலு‌க்கு வ‌ந்தவுட‌ன் பு‌திதாக உறு‌திமொ‌ழி எடு‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதும், இடைக்கால அரசியல் சட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுக்கத் தவறியதற்காக, பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட மாட்டார்கள்" எ‌ன்றா‌ர்.

அவசர ‌நிலை‌ப் ‌பிரகடன‌த்தை ர‌த்து செ‌ய்வத‌ற்கு முன்னதாக எடு‌க்க வேண்டிய நடவடி‌க்கைகளை அ‌திப‌ர் முஷாரஃ‌ப் எடு‌த்து வரு‌கிறா‌ர்.

அணுஆயுதங்கள் இதுவரை ராணுவத் தளபதியின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது அவர் ராணுவத் தளபதி பதவி‌யி‌லிரு‌ந்து ‌வில‌கி விட்டதால், அணுஆயுதங்களின் கட்டுப்பாட்டை தன் வசம் கொண்டு வந்து இருக்கிறார். இதற்கான அவசரச்சட்டத்தை அவர் நேற்று அவர் பிறப்பித்தார்.

அணுஆயுதங்களை உருவாக்குவது அவற்றை பாதுகாப்பது ஆகிய பொறுப்புகள் தே‌சிய‌ப் பாதுகா‌ப்பு ஆணைய‌த்‌திட‌ம் உள்ளது. இந்த ஆணைய‌த்‌தி‌ன் தலைவராக ராணுவத் தளபதிதான் இதுவரை இருந்தார். இப்போது அ‌ப்பத‌வி‌யி‌ல் அ‌திப‌ர் இருப்பார் எ‌ன்று அ‌ந்த‌ச் சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது.