1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

நவா‌‌ஸ் ஷெ‌ரீஃ‌ப் நாளை நாடு ‌திரு‌ம்பு‌கிறா‌ர்!

பா‌கி‌ஸ்தா‌ன் நவா‌ஸ் ஷெ‌ரீஃ‌ப் சகோதரரு‌ம் நாளை நாடு
பா‌கி‌ஸ்தா‌ன் மு‌‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் நவா‌ஸ் ஷெ‌ரீஃ‌ப்பு‌ம் அவ‌ரி‌ன் சகோதரரு‌ம் நாளை நாடு ‌திரு‌ம்புவா‌ர்க‌ள் எ‌ன்று பா‌கி‌ஸ்தா‌ன் மு‌ஸ்‌லி‌ம் ‌லீ‌க் (நவா‌ஸ்) க‌ட்‌சி‌யி‌ன் தலைவ‌ர்க‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.

த‌ற்போது சவு‌தி‌யி‌ல் த‌ங்‌கி‌யிரு‌க்கு‌ம் நவா‌‌ஸ் ஷெ‌ரீஃ‌ப் பா‌கி‌ஸ்தா‌ன் ‌திரு‌ம்பு‌ம் ‌தி‌ட்ட‌ம் தொட‌ர்பாக நே‌ற்று சவு‌‌தி அரச‌ர் அ‌ப்து‌ல்லா ‌பி‌ன் அ‌ப்து‌ல் ஆ‌ஷி‌ஸ் இ‌ன் ‌ரியா‌த்தை‌ச் ச‌ந்‌தி‌த்து‌ப் பே‌சினா‌ர்.

இதுகு‌றி‌த்து லாகூ‌ரி‌‌ல் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த பா‌கி‌ஸ்தா‌ன் மு‌ஸ்‌லி‌ம் ‌லீ‌க் (நவா‌ஸ்) க‌ட்‌சி‌யி‌ன் தலைவ‌ர்க‌ள், நவா‌ஸ் ஷெ‌ரீஃ‌ப் நாளை நாடு ‌திரு‌‌‌ம்ப‌த் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளா‌ர். அவருட‌ன் ல‌ண்ட‌னி‌ல் உ‌ள்ள அவ‌ரி‌ன் சகோதர‌ர் ஷாபா‌ஷ் ஷெர‌ீஃ‌ப்பு‌ம் வரவு‌ள்ளா‌ர் எ‌ன்றன‌ர்.

மு‌ன்னதாக, தா‌ன் நாடு ‌திரு‌ம்பு‌ம் வரை பா‌கி‌ஸ்தா‌னி‌ல் நட‌க்கவு‌ள்ள பொதுத் தே‌ர்த‌லி‌ல் வே‌ட்புமனு தா‌க்க‌ல் செ‌ய்ய வே‌ண்டா‌ம் எ‌ன்று த‌ன்னுடைய க‌ட்‌சி‌யினரை நவா‌‌‌ஸ் ஷெ‌ரீஃ‌ப் அ‌றிவுறு‌த்‌தி‌யிரு‌ந்தா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.