1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

இந்தியா-அணு சக்தி முகமை முதல் சுற்று பேச்சு முடிந்தது!

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் சர்வதேச அணு சக்தி முகமை ஷீல்காந்த் சர்மா
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின்படி, இந்தியாவிற்கென தனித்த கண்காணிப்பு உடன்பாடு செய்துகொள்வதற்காக சர்வதேச அணு சக்தி முகமையுடன் நடந்த முதல் சுற்று பேச்சுவார்த்தை இன்று முடிந்தது.

இன்றுடன் கடந்த 3 நாட்களாக நடந்த பேச்சு முழுக்க, முழுக்க தொழில்நுட்ப கூறுகள் பற்றியதாகும் என்று கூறிய இந்தியக் குழுவின் தலைவர் ஷீல்காந்த் சர்மா, இந்தியாவிற்கென தனித்த கண்காணிப்பு உடன்பாட்டை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தையை வேகமாக முடிக்கும்படி அரசு வலியுறுத்தியுள்ளதாகவும், அடுத்த கட்ட பேச்சு விரைவில் துவங்கும் என்றும் கூறியதாக பி.டி.ஐ. செய்தி கூறுகிறது.