1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

‌ம‌ன்னா‌ரி‌ல் 22,000 பே‌ர் இட‌ம்பெய‌ர்வு: ஐ.நா தகவ‌ல்!

‌இல‌ங்கை ம‌ன்னா‌ர் பகு‌தி ‌சி‌றில‌ங்கா ராணுவ‌‌ம் தா‌க்குத‌ல் 22
‌இல‌ங்கை ம‌ன்னா‌ர் பகு‌திக‌ளி‌ல் ‌சி‌றில‌ங்கா ராணுவ‌த்‌தின‌ர் முறைகேடாக நட‌த்‌திவரு‌ம் ஏவுகணை‌த் தா‌க்குத‌ல்க‌ளினா‌ல் 22,000 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட பொதும‌க்க‌ள் இட‌ம்பெய‌ர்‌ந்து‌ள்ளன‌ர் எ‌ன்று ஐ.நா அ‌றி‌க்கை‌யி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு உ‌‌ள்ளது.

இல‌ங்கை‌யி‌ன் வட‌க்கு, ‌கிழ‌க்கு பகு‌திக‌ளி‌ல் ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம், ராணுவ‌த்‌தினரு‌க்கு‌‌ம் இடை‌யி‌ல் நடைபெ‌ற்று வரு‌ம் மோத‌ல்களா‌ல் பொதும‌க்க‌ள் பெருமள‌வி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். அவ‌ர்களு‌க்கு அ‌ப்பகு‌திக‌ளி‌ல் இய‌ங்‌கிவரு‌ம் ஐ.நா‌வி‌ன் குழு‌க்க‌ள் தேவையான உத‌விகளை‌ச் செ‌ய்து வரு‌கி‌ன்றன.

இ‌க்குழு‌க்க‌ளி‌ன் செய‌ல்பாடுக‌ள் தொட‌ர்பாக ஐ.நா வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ம‌ன்னா‌ரி‌ல் ராணுவ‌த்‌தி‌ன் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல் இ‌ல்லாத பகு‌திக‌ளி‌ல் ‌சி‌ங்கள ராணுவ‌த்‌தின‌ர் நட‌த்‌திவரு‌ம் தொட‌ர்‌ச்‌சியான தா‌க்குத‌ல்களா‌ல் பொதும‌க்க‌ள் இட‌ம்பெய‌ர்வது அ‌‌திக‌ரி‌த்து வரு‌கிறது எ‌ன்று கவலை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

''ம‌ன்னா‌ரி‌ல் மா‌ந்தை மே‌ற்கு, அட‌ம்ப‌ன், ஆ‌‌ண்டா‌ன்குள‌ம், பெ‌ரியமடு, ப‌‌ள்ளமடு பகு‌திகளை‌ச் சே‌ர்‌ந்த ம‌க்க‌ள் ‌கி‌ளிநொ‌‌ச்‌சி எ‌ல்லைகளு‌க்கு இட‌ம்பெய‌ர்‌ந்து‌ள்ளன‌ர்.

அ‌திகாரபூ‌ர்வமான தகவ‌ல்க‌ளி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் 5,398 குடு‌ம்ப‌ங்களை‌ச் சே‌ர்‌ந்த 22,332 பே‌ர் இட‌ம்பெய‌ர்‌ந்து‌‌ள்ளதாக‌த் தெ‌ரியவ‌ந்து‌ள்ளது. வவுனியாவில் இருந்து சுமார் 3,071 குடும்பங்களைச் சேர்ந்த 10,302 இடம்பெயர்ந்துள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு‌த் தேவையான இரு‌ப்‌பிடம், உணவு, குடிநீர் வசதிகளை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வழங்‌கி வருகின்றன. யு.என்.எச்.சி.ஆர், ஆக்ஸ்பாம், உலக உணவுத் திட்டம், வேர்ல்ட் விசன், சேவா நிறுவனங்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கு‌த் தேவையான உத‌விகளை மனிதாபிமான அடி‌ப்படை‌யி‌ல் வழங்கி வருகின்றன'' என்று அ‌ந்த அ‌றி‌க்கை‌யி‌ல் கூறப்பட்டுள்ளது.