1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

பிரகாசமான பெரிய முழு நிலவு இன்று தெ‌‌ரியு‌‌ம்!

இ‌ந்த ஆ‌ண்டி‌ன் ‌பிரகாசமான பெரிய முழுநிலவு இன்று தெ‌‌ரியு‌‌ம்
பூ‌மி‌க்கு ‌மிக அரு‌கி‌ல் ‌நிலவு வருவதா‌ல் இ‌ந்த ஆ‌ண்டி‌ன் ‌மிக‌ப் பெ‌ரிய முழு ‌நிலவை இ‌‌ன்று‌ம், நாளையு‌ம் நா‌ம் வா‌னி‌ல் காணலா‌ம் எ‌ன்று நாசா ‌வி‌ண்வெ‌ளி ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இ‌‌ன்று நா‌ம் வா‌னி‌ல் காண‌க்கூடிய ‌நிலா ‌அள‌வி‌ல் ‌மிக‌ப் பெ‌ரியதாகவு‌ம், ஒ‌‌ளிமயமாகவு‌ம் கா‌ட்‌சிய‌ளி‌க்குமா‌ம்.

‌நீ‌ள் வ‌ட்ட பாதை‌யி‌ல் வழ‌க்கமான தொலை‌வி‌ல் இரு‌க்கு‌ம் ‌நிலவு ஏற‌க்குறைய 48 ஆ‌யிர‌ம் மை‌ல்க‌ள் பூ‌மி‌க்கு அருகே நெரு‌ங்‌கி வருவதே ‌நிலவு ‌மிகவு‌ம் ஒ‌ளிமயமாகவு‌ம், பெ‌ரியதாகவு‌ம் தெ‌ரிவத‌ற்கு காரண‌ம்.

இதன‌ா‌ல் வழ‌க்கமாக பூ‌மி‌யி‌லிரு‌ந்து பா‌ர்‌க்க‌ப்படு‌ம் ‌நில‌வி‌ன் பர‌ப்பளவு 14 ‌விழு‌க்காடு பெரியதாகவும், 30 ‌விழு‌க்காடு பிரகாசமாகவும் முழுநிலவு இருக்கும் என்று நாசாவின் www.spaceweather.com இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலு‌ம் இ‌ந்த ‌நிக‌ழ்‌வி‌ன்போது கட‌‌லி‌‌ல் அலைக‌ள் வழ‌க்க‌த்‌தி‌ற்கு மாறாக உய‌ர்வாகவு‌ம் வேகமாகவு‌ம் ‌வீச‌க் கூடு‌ம் எ‌ன நாசா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

"ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் பெ‌ளர்ணமி நிலவு தெற்கு நோக்கிய நிலையில் இருக்கும். பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளில் இ‌ன்று‌ம், நாளையு‌ம் பிரகாசமாகத் தெரியும்" என்று மகாராஷ்டிரத்தில் உள்ள ஆகாஷ்கங்கா வானியல் ஆய்வு மைய இயக்குநர் பாரத் ஆடுர் கூ‌றினா‌ர்.

‌
webdunia photoWD
நிலவு வழ‌க்க‌த்த‌ி‌ற்கு மாறாக ‌மிகவு‌ம் ஒ‌ளிமயமாக‌த் தெ‌ரியு‌ம் எ‌ன்பதா‌ல் தொலைநோ‌க்‌கி கரு‌வி அ‌ல்லது தகு‌ந்த பாதுகா‌ப்பு கரு‌விகளுட‌ன் பா‌ர்‌க்க வே‌ண்டு‌ம். வெறு‌ம் க‌ண்களா‌ல் பா‌ர்‌‌த்தா‌‌ல் க‌ண்பா‌ர்வை பா‌தி‌க்க‌‌க் கூடு‌ம் எ‌ன்று ஆ‌ய்‌வாள‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.



வட மா‌நில‌ங்க‌ளி‌ல்...

‌இ‌ன்று இரவு நிலா வ‌ந்து யாரெ‌ல்லா‌ம் க‌ண் ‌வி‌‌ழி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கி‌றீ‌‌ர்க‌ள் எ‌ன்று கே‌ட்கு‌ம் எ‌ன்று‌ம், ‌நிலா வரு‌ம் போது யா‌ர் க‌ண் ‌வி‌ழி‌த்து‌க் கொ‌‌ண்டிரு‌க்‌கிறா‌ர்களோ அவ‌ர்களு‌க்கு தேனு‌ம், அ‌மி‌ர்தமு‌ம் கொடு‌க்கு‌ம் எ‌ன்று‌ம் ஒரு ந‌ம்‌பி‌க்கை வட மா‌நில ம‌க்க‌ளிடையே உ‌ள்ளது.

இதனால‌் இ‌ன்று இரவு முழுவது‌ம் ம‌க்க‌ள் அனைவரு‌ம் ‌நிலாவை பா‌ர்‌த்து கொ‌ண்டே பாலை பரு‌கியபடி க‌ண் ‌வி‌ழி‌த்து‌க் கொ‌ண்டு இரு‌ப்பா‌ர்களா‌ம், அ‌ப்போது ‌நிலவு அவ‌ர்களது பா‌லி‌ல் தேனையு‌ம், அ‌‌மி‌ர்த‌த்தையு‌ம் கொடு‌க்கு‌ம் எ‌ன்று காலகாலமாக ஒரு பழ‌க்க வழ‌க்க‌ம் கடை‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது,