1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

கரு‌த்தொ‌ற்றுமை ஏ‌ற்படு‌த்த முய‌ற்‌சி : ‌பிரதம‌ர்!

இ‌‌ந்‌திய அமெ‌ரி‌க்க அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்தம் மன்மோகன் சிங்
இ‌‌ந்‌திய-அமெ‌ரி‌க்க அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த ‌விவகார‌த்‌தி‌ல் கரு‌த்தொ‌ற்றுமையை ஏ‌ற்படு‌த்துவத‌ற்கு ம‌த்‌திய அரசு முய‌ற்‌சி‌த்து வருவதாக ‌‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மன்மோகன் சிங்கிடம் அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் எழுந்துள்ள உள்நாட்டு நிர்ப்பந்தங்கள் குறித்து கேட்டபோது, அரசியல் ரீதியாக இந்த பிரச்சனைக்கு ஒருமித்த கருத்தை உருவாக்கும் முயற்சிகள் மீண்டும் தொடங்கி இருப்பதாக கூறினார்.

‌அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் கை‌விட‌ப்படு‌ம் எ‌ன்று எழு‌ந்த கரு‌த்துகளு‌க்கு மறு‌ப்பாக ‌பிரதம‌ரி‌ன் கரு‌த்து அமை‌ந்து‌ள்ளது.

இதனிடையே அணுஎ‌ரிபொரு‌ள் வழங்கும் நாடுகள் குழுவில் உ‌ள்ள பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆ‌கிய நாடுக‌ள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

மு‌ன்னதாக ‌பி‌ரி‌‌‌ட்டோ‌ரியா‌வி‌ல் நடைபெ‌ற்ற இ‌ந்‌தியா- ‌பிரே‌சி‌ல்- தெ‌ன்னா‌ப்‌பி‌ரி‌க்கா நாடுக‌ள் கூ‌ட்டமை‌‌ப்‌பி‌ன் மாநா‌ட்டி‌ல் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் ப‌ங்கே‌ற்று‌ப் பே‌சினா‌ர்.