1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

‌தி‌ட்‌ட‌மி‌ட்டபடி பா‌கி‌ஸ்தா‌ன் ‌திரு‌ம்புவே‌ன்: பெனா‌‌சீ‌ர்!

பா‌கி‌ஸ்தா‌ன் பெனா‌சீ‌ர் பு‌ட்டோ
‌தி‌ட்ட‌மி‌ட்டபடி வரு‌கிற 18ஆ‌ம் தே‌தி பா‌கி‌ஸ்தா‌ன் ‌திரு‌‌ம்பவு‌ள்ளதாக பா‌‌கி‌ஸ்தா‌னி‌ன் மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் பெனா‌சீ‌ர் பு‌ட்டோ தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வரு‌கிற 18ஆ‌‌ம் தே‌தி நாடு ‌திரு‌ம்ப‌த் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ள பா‌கி‌ஸ்தா‌னி‌ன் மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் பெனா‌சீ‌ர் பு‌ட்டோ தனது வருகையை‌த் த‌ள்‌ளி‌ப்போட வே‌ண்டு‌ம் எ‌ன்று அ‌ந்நா‌ட்டு அ‌திப‌ர் ப‌ர்வே‌ஷ் முஷாரஃ‌ப் வ‌லியுறு‌த்‌தினார். மேலு‌ம் நாடு ‌திரு‌ம்பு‌ம் போது பெனா‌சீ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட மா‌ட்டா‌ர், ச‌ட்ட‌ப்படியான நடவடி‌க்கைக‌ள் ம‌ட்டுமே எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று அவ‌ர் உறு‌திய‌ளி‌த்தா‌ர்.

லாகூ‌ரி‌ல் த‌னியா‌ர் தொலை‌க்கா‌ட்‌சி ஒ‌ன்‌‌றி‌ற்கு‌ப் பே‌ட்டிய‌ளி‌த்த பா‌கி‌ஸ்தா‌ன் அ‌திப‌ர் ப‌ர்வே‌ஷ் முஷாரஃ‌ப் இதை‌த் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மேலு‌ம், உ‌ச்ச‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌நிலுவை‌யி‌ல் உ‌ள்ள அ‌திப‌ர் தே‌ர்த‌ல் வழ‌க்குக‌‌ளி‌ன் ‌தீ‌‌ர்‌ப்பு ‌விரை‌‌வி‌ல் வெ‌ளியா‌கி‌விடு‌‌ம் எ‌ன்று‌ம் அத‌ன்‌பிறகு பெனா‌சீ‌ர் நாடு ‌திரு‌ம்புவது பொறு‌த்தமாக இரு‌க்கு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் கரு‌த்து‌‌க் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

‌ஆனா‌ல் முஷாரஃ‌பி‌ன் இ‌ந்த‌க் கரு‌த்தை பெனா‌சீ‌ர் மறு‌த்துள்ளா‌ர். ‌தி‌ட்ட‌மி‌ட்டபடி நாடு ‌திரு‌ம்புவே‌ன் எ‌ன்று அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர். பெனா‌சீ‌ரி‌ன் பா‌கி‌ஸ்தா‌ன் ம‌க்க‌ள் க‌ட்‌சியு‌ம் இதை உறு‌தி செ‌ய்து‌ள்ளது.