1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

மன்னாரில் இடம்பெயர்ந்த மக்க‌‌ள் பா‌தி‌ப்பு!

இடம்பெயர்ந்த மக்கள்  மன்னாரில் மருந்துப் பொருட்களை
‌சி‌றில‌ங்கா‌வி‌ல் உ‌ள்ள மன்னாரில் மாந்தை மேற்கு மடுப்பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் நடத்தி வரும் ஏவுகணை, ‌விமான‌த் தாக்குதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் பலத்த பா‌தி‌ப்படை‌ந்து‌ள்ளன‌ர்.

வெள்ளாங்குளம், பாலியாறு, இலுப்பைக்கடவை, தேவன்பிட்டி, கள்ளியடி, அந்தோனியார்புரம், பள்ளமடு, பெரியமடு, பாலம்பிட்டி ஆகிய பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தினர் உயிலங்குளம் போக்குவரத்துப் பாதையினை மூடியுள்ளனர். எனவே உணவு மற்றும் மருந்துப் பொருட்களை எடுத்துவர முடியாத ‌‌நிலை ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. இதனால் இடம்பெயர்ந்த மக்கள் ‌பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு உ‌‌ள்ளனர்.

மேலும் தற்போது நிலவும் வறட்சியான காரணமாக குடிநீர் நெருக்கடி ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. இதனா‌ல் இடம்பெயர்ந்த மக்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்படக்கூடிய நிலை உருவா‌கியுள்ளது.