1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

16 இந்திய மீனவர்கள் பாகிஸ்தானில் கைது!

16 இந்திய மீனவர்கள் பாகிஸ்தானில் கைது!
பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் மீன் பிடித்ததாக 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு பாதுகாப்புத்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் கிழக்குக் கடல் எல்லையில் கடலோரக் காவல் படையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்

அப்போது அந்நாட்டின் தனிப்பட்ட பொருளாதார மண்டலத்தில் இருந்து 30 கடல்மைல் தொலைவில் இந்திய மீனவர்கள் 16 பேர் 4 படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

காவல்படையினர் உடனடியாக மீனவர்களைக் கைது செய்து, படகுகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் மீனவர்கள் விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
About Writer
Webdunia