1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

‌‌‌விய‌ட்னா‌மி‌ல் பால‌ம் இடி‌ந்து 14 பே‌ர் ப‌லி!

‌‌‌விய‌ட்னா‌ம் பாலம் விபத்து
தெ‌ற்கு ‌விய‌ட்னா‌மி‌ல் உ‌ள்ள கே‌ன்தோ மா‌‌நில‌த்‌தி‌ல் பு‌திதா‌க‌க் க‌ட்ட‌ப்ப‌ட்டு வ‌ந்த பால‌ம் இ‌ன்று காலை இடி‌ந்ததி‌ல் 14 பே‌ர் இற‌ந்து‌ள்ளன‌ர்.

"நா‌ங்க‌ள் இதுவரை 14 உட‌ல்களை ‌மீ‌ட்டு‌ள்ளோ‌ம், இ‌‌டிபாடுக‌ளி‌ல் மேலு‌ம் பல‌ர் ‌சி‌க்‌கியு‌ள்ளன‌ர். அவ‌ர்களை ‌மீ‌ட்கு‌‌ம் ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளோ‌ம்" எ‌ன்று போ‌க்குவர‌த்து அ‌திகா‌ரி வுட‌க் ஹங் கூ‌றியு‌ள்ளா‌ர்.

‌விப‌த்து நட‌ந்தபோது 250 ப‌ணியாள‌ர்களு‌ம், பொ‌றியாள‌ர்களு‌ம் ப‌ணியா‌ற்‌றி வ‌‌ந்தன‌ர் எ‌ன்று பொது‌ப்ப‌ணி‌த் துறை அ‌திகா‌ரி ‌லி டா‌ன் ஹூ‌க் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.