1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

நேபாள வ‌ன்முறை‌யி‌ல் இற‌ந்தோ‌‌ர் எ‌ண்‌ண‌ி‌க்கை 23 ஆக உய‌ர்வு!

நேபாளம் வன்முறை
வட‌க்கு நேபாள‌த்‌தி‌ல் நடைபெ‌ற்றுவரு‌ம் வ‌ன்முறைக‌ளி‌ல் இ‌ற‌ந்தோ‌ரி‌ன் எ‌‌ண்‌ணி‌க்கை 23ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது. இ‌ன்று காலை பு‌திதாக 8 உட‌ல்க‌ள் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டன.

க‌பிலவ‌ஸ்து மாவ‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ள தே‌விநக‌ர் பகு‌தி‌யி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் உட‌ல்களை‌க் க‌ண்டு‌பிடி‌த்ததாக‌ உ‌ள்ளூ‌ர் தொலை‌க்கா‌ட்‌சி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது. இ‌ன்னமு‌ம் 30‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்களை‌க் காண‌வி‌ல்லை எ‌ன்று புகா‌ர்க‌ள் வ‌ந்து‌ள்ளன.
‌
‌பி‌ர்‌ப்பூ‌ர் ‌கிராம‌த்‌தி‌ல் மாவோ‌யி‌‌ஸ்‌ட்டுகளு‌க்கு எ‌திரான இய‌க்க‌த்‌தி‌ன் மு‌ன்னா‌ள் தலைவ‌ர் மொ‌கி‌த் கா‌ன் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதையடு‌த்து இ‌க்கலவர‌ம் வெடி‌த்தது. கட‌ந்த ஞ‌ா‌யி‌ற்று‌க் ‌கிழமை முத‌ல் அ‌ங்கு ஊரட‌ங்கு உ‌த்தரவு ‌பிற‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.