1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

கண்ணிவெடித் தாக்குதலில் சிறிலங்க ராணுவத்தினர் காயம்!

கண்ணிவெடி சிறிலங்கா ராணுவம்
யாழ்ப்பாணத்தில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் சிறிலங்க ராணுவத்தினர் 5 பேரும், அப்பாவி ஒருவரும் காயமுற்றதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது!

பலாலியில் உள்ள ராணுவ முகாமை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த ராணுவ வாகனத்தை குறிவைத்து இன்று மதியம் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்க ராணுவம் கூறியுள்ளது.

யாழ்ப்பாணத்தின் முகமாலை பகுதியில் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் உட்பட்ட பகுதிக்குள் ஊடுருவ முயன்ற விடுதலைப் புலிகள் இரண்டு பேரை சுட்டுக் கொன்றதாகவும் சிறிலங்க ராணுவச் செய்தி கூறுகிறது.
About Writer
Webdunia