1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

உலக ஹிந்தி மாநாட்டில் வெப்துனியா

உலக ஹிந்தி மாநாட்டில் வெப்துனியா
PTI photographerPTI
நியூயார்க்கில் துவங்கியுள்ள 8வது உலக ஹிந்தி மாநாட்டில் அம்மொழியில் வெளிவந்த முதல் பல்கலைத்தளமான வெப்துனியா பங்கேற்றுள்ளது.

ஹிந்தி மொழிக் கவிஞர் அசோக் சக்ரதானா தலைமையில் துவங்கிய இம்மாநாட்டில் இந்திய அரசின் சார்பாக அயலுறவுத் துணை அமைச்சர் ஆனந்த் சர்மா பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.

இம்மாநாட்டில் வெப்துனியாவின் சார்பாக எமது நிறுவனத்தின் துணைத் தலைவர் பர்வீந்தர் குஜ்ரால் கலந்து கொண்டுள்ளார்.

இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இம்மாநாட்டில் வெப்துனியா ஹிந்தி பல்கலைத் தளம் குறித்தும் அதன் பொருள் அடக்கம் குறித்தும் பர்வீந்தர் குஜ்ரால் விளக்கிப் பேச உள்ளார்.
About Writer
Webdunia