1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

விடுதலைப் புலிகள் படகுகள் மூழ்கடிப்பு, 40 பேர் பலி : சிறிலங்க கடற்படை!

விடுதலைப் புலிகள் சிறிலங்க கடற்படை
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படையைச் சேர்ந்த 5 படகுகளை மூழ்கடித்ததாகவும், இதில் 40 புலிகள் கொல்லப்பட்டதாகவும் சிறிலங்க கடற்படை கூறியுள்ளது!

யாழ்ப்பாண தீபகற்பத்தை ஒட்டியுள்ள கடற்பகுதியில் நேற்று இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறிலங்க கடற்படையின் அதிவேக பாதுகாப்புப் படகுகள், விடுதலைப் புலிகளின் கடற்படையைச் சேர்ந்த படகுகளுடன் மோதலில் ஈடுபட்டதாகவும், இந்தச் சண்டையில் விடுதலைப் புலிகளின் 5 படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

மூழ்கடிக்கப்பட்ட 5 படகுகள் தவிர புலிகளின் மேலும் 9 படகுகளை தாக்கி சேதப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ள பாதுகாப்பு அமைச்சகம், விடுதலைப் புலிகளின் தொலைத் தொடர்பை இடைமறித்துக் கேட்டதில் 40 புலிகள் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளது.

இந்த மோதல் குறித்து விடுதலைப் புலிகள் எந்தத் தகவலையும் இதுவரை தெரிவிக்கவில்லை. (யு.என்.ஐ.)
About Writer
Webdunia