1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

பாகிஸ்தானில் தாக்குதல்: 6 ராணுவத்தினர் உள்பட 9 பேர் பலி

பலுசுஸ்தான் தாக்குதல் 9 பேர் பலி
பாகிஸ்தானில் அந்நாட்டு ராணுவத்தினர் சென்ற வாகனத்தை குறிவைத்து நடந்த தாக்குதலில் 6 ராணுவத்தினர் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.

பலுசுஸ்தான் மாகாணத்தில் நேற்று நள்ளிரவு ராணுவத்தினர் சென்ற வாகனத்தை நோக்கி அடையாளம் தெரியாத சிலர், சரமாரியாக சுட்டதாகவும், இதில் ராணுவ வீரர்கள் 6 பேரும், ஒரு காவலரும், இரண்டு அப்பாவிகளும் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவத்தின் துணை தளபதி வாகீத் ஹர்சாத் கூறியுள்ளார்.

இத்தாக்குதலை நடத்தியது தாங்கள் தான் என்று தடைசெய்யப்பட்ட பலுசுஸ்தான் விடுதலை அமைப்பு கூறியுள்ளது.(பி.டி.ஐ)
About Writer
Webdunia