1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

மீண்டும் போட்டியிடுவேன் : முஷாரஃப்!

பாகிஸ்தான் பர்வேஸ் முஷாரஃப்
பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி பொறுப்பை துறக்காமலேயே அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் கூறியுள்ளார்!

அல் அராபியா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், அதிபர் தேர்தலிற்கு முன்னதாக தளபதி பொறுப்பில் இருந்து விலகப் போவதில்லை என்று முஷாரஃப் கூறியதாக இஸ்லாமாபாத்தில் இருந்து வெளிவரும் டெய்லி டைம்ஸ் நாளிதழ் கூறியுள்ளது.