இந்தியாவில் பயன்பாட்டிலுள்ள மற்ற எந்த அணையையும் போன்று முல்லைப் பெரியாறு அணையும் பலமாகவே உள்ளது. 1979ஆம் ஆண்டிலும், அதன் பிறகு 1999ஆம் ஆண்டிலும், பிறகு 2004ஆம் ஆண்டிலும் மத்திய அரசின் நீர் வளத் துறையின் நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு, அணை பலமாக உள்ளதென அறிக்கையளிக்கப்பட்டுள்ளது.