அலைகழிப்பு...பணம் பறிப்பு... அலட்சியம்... நோயாளிகள் குமுறல்
webdunia photo WD |
ஏழைகள் நாடிச் செல்வது அரசு மருத்துவமனையைதான். ஆனால் அந்த அரசு மருத்துவமனையே பணம் பறிக்கும் இடமாக இருந்தால் ஏழைகள் எங்கேதான் போவார்கள். நோயாளிகள் அலைகழிக்கப்படும் கொடுமை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அரங்கேறி வருகிறது. இதற்கு முன்னுதாரமாக விளங்கி வருகிறது திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான ஏழைகள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார். இந்த மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பதிவு செய்யுமிடம், உள்நோயாளிகள் பதிவு செய்யுமிடம், அவசர சிகிச்சைப் பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, மருந்தகம், ஊசி போடுமிடம் (ஆண்கள், ஊசி போடுமிடம் (பெண்கள்), கட்டு கட்டுமிடம், தீவிர சிகிச்சைப் பிரிவு, காசநோய் சிகிச்சைப் பிரிவு, சிறப்பு சிகிச்சைப் பிரிவு, காது, மூக்கு, தொண்டை பிரிவு, சிறப்பு சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, சிசு தீவிர சிகிச்சைப் பிரிவு, ஆண்கள் மருத்துவ பிரிவு,
webdunia photo WD |
பெண்கள் மருத்துவ பிரிவு, கண் சிகிச்சைப் பிரிவு, பல் மருத்துவப் பிரிவு, பிரசவ முன் கவனிப்பு பிரிவு, பிரசவ பின் கவனிப்பு பிரிவு, பிரசவ வார்டு மகப்பேறு அவசர சிகிச்சைப் பிரிவு, பச்சிளம் குழந்தைகள் வார்டு, ஆண்கள் மருத்துவ வார்டு, பெண்கள் மருத்துவ வார்டு, அறுவை சிகிச்சை வார்டு, அறுவை அரங்கு, அறுவை பின் கவனிப்பு வார்டு (ஆண்கள்), அறுவை பின் கவனிப்பு வார்டு (பெண்கள்), குடும்பல நல பிரிவு, சித்தா மருத்துவப் பகுதி, பால்வினை நோய் சிகிச்சைப் பிரிவு, இரத்த வங்கி, எக்ஸ்ரே, இ.சி.ஜி., ஸ்கேன், ஐசிடிசி பிரிவு ஆகியவை உள்ளன.
ஆனால் மருத்துவமனையில் ஸ்கேன் இருந்தும் அது செயல்படாமல் 4 ஆண்டுகளாக இருந்து வருகிறது. மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றால் தனியார் ஸ்கேன் மையத்திற்குதான் செல்ல வேண்டும்.
ஸ்கேன் எந்திரம் இல்லாததது மருத்துவமனை கண்காணிப்பாளர் சேகருக்கு தெரிந்தும் கூட, அவற்றை சரிபார்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் இதுவரை அவருக்கு வந்ததில்லை. அரசு மருத்துவமனை டாக்டர்கள் அருகில் உள்ள தானியாருக்கு சொந்தமான கோகுல் ஸ்கேன் மையத்திற்குதான் நோயாளிகளை அனுப்பிவைக்கிறார்கள். ஏன் என்று பார்த்தால் அரசு மருத்துவமனையில் முக்கிய இடங்களில் கோகுல் ஸ்கேன் மையத்தின் பெயர் கொண்ட காலண்டர்கள்தான் தொங்கவிடப்பட்டுள்ளது.
இந்த தனியார் ஸ்கேன் மையத்தில் உடலில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு ரேட் வைக்கப்பட்டுள்ளது. வயிற்று பகுதிக்கு 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இப்படி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், கர்ப்பிணிகள் அனைவரும் கோகுல் ஸ்கேன் மையத்திற்குதான் படையெடுக்கிறார்கள். கோகுல் ஸ்கேன் மையத்திற்கும், அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கும் என்ன டீல் என்றே தெரியவில்லை.
webdunia photo
WDஇது ஒரு பக்கம் அரங்கேறினாலும், ஏழை கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனர். பணம் இல்லாத என்ற ஒரே காரணத்திற்காக அரசு மருத்துவமனையை நம்பி வரும் அவர்களிடம் பணத்தை கறப்பது எவ்வளவு கேவலமான செயல். ஆனால் அந்த கேவலமான செயலில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் ஈடுபட்டு வருவதுதான் வேதனை.
webdunia photo WD |
அறுவை சிகிச்சைக்கு பிறகு வார்டுக்கு அழைத்து வரப்படும் கர்ப்பிணியிடம் 500 ரூபாய் கொடு என்று நச்சரித்து பணத்தை வாங்கி செல்லும் அரசு மருத்துவமனை ஊழியர்களை கேட்க யாரும் இல்லை. அறுவை சிகிச்சைக்கு செல்லும் முன் உடைகளை மாற்ற 100 ரூபாய். அறுவை சிகிச்சை முடிந்து அந்த உடைகளை கழற்ற 100 ரூபாய். வார்டுக்கு கொண்டு வந்த சேர்க்க 500 ரூபாய். கர்ப்பிணிகள் இருக்கும் வார்டை சுத்தம் செய்ய ஒவ்வொரு பெட்டில் இருப்பவர்களும் கொடுக்கும் பணம் 50 ரூபாய்.
webdunia photo
WDபிரசவரத்திற்கு வரும் கர்ப்பிணிகள் மருத்துவமனையில் அட்மிட் ஆக லஞ்சம் கொடுத்தால்தான் அந்த ஊழியர்கள் அட்மிஷன் போடுகின்றனர். இதில் பல மருத்துவ பிரிவுகள் செயல்படாமலே இருக்கின்றன. காசநோய் பிரிவு பாழடைந்த நிலையில் கிடக்கிறது. அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடுமையான மனஉளைச்சலை சந்தித்து வருகின்றனர். பிரசவத்துக்காக மகளையோ, மருமகளையோ சேர்த்து விட்டு பிரவசம் சுகமாக நடக்குமா? ஆபரேசனா என்ற கவலையில் இருக்கும் ஏழைப் பெண்களிடம் பணம் கறப்பதிலேயே மருத்துவமனை ஊழியர்கள் இருக்கின்றனர். இதில், நோயாளிகளை பயமுறுத்தும் நாய்கள். பிரசவ வார்டு உள்ளிட்ட அனைத்து வார்டுகளிலும் நாய்கள் தொல்லை. இந்த நாய்களை விரட்ட யாரும் இல்லை.
webdunia photo WD |
மேலும் கொடுமை என்னவென்றால் ஆபரேஷன் தியேட்டரில் டாக்டர்கள் சினிமா பாடல்களை கேட்டுக் கொண்டுதான் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டாக்டர்களின் கவனக்குறைவான ஆபரேஷனால் கர்ப்பிணிகளுக்கு போடப்படும் தையல்கள் பிரிந்து சீல் வைக்கும் நிலைமைக்கு டாக்டர்கள் தள்ளிவிடுகின்றனர். குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் ஒருவருக்கு ஆபரேஷன் சரியாக செய்யாததால் அந்த பெண்ணுக்கு வற்றில் ரத்தக் கட்டி ஏற்பட்டு அவதிப்படுகிறார்.
இது குறித்து தலைமை மருத்துவர் பத்மாவதியிடம் கூறினால், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். யாரிடம் சொல்ல வேண்டாம் என்று அந்த பெண்ணை சமாதானப்படுத்துகிறார்.
அரசு டாக்டர்களின் இப்படிப்பட்ட அலட்சியத்தால் பல விளைவுகளை அரசு மருத்துவமனை சந்திக்காமல் இருப்பதற்கு முன்பாக தமிழக அரசு இதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட நோயாளிகள் குமுறலாக இருக்கிறது.
webdunia photo WD |
அரசு மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான நோயாளிகள் வருகின்றனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மருந்து, மாத்திரைகள், ஊசிகள் போட்டுக் கொண்டு செல்கின்றனர். இதில் உள்நோயாளிகள் படும் அவதி கொஞ்சம் நெஞ்சமில்லை. மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கிறது. முதலில் அவர்கள் OP சீட் வாங்கிதான் சம்பந்தப்பட்ட டாக்டர்களை பார்க்க முடியும். நூற்றுக்கணக்கானோர் கைக்குழந்தையுடன் வரிசையில் கால் கடுக்க நின்று கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அந்த OP சீட்டை கொடுப்பதற்கு இரண்டு பேர் மட்டுமே உள்ளனர். இதற்கு இந்த படமே சாட்சி.
சில வேளைகளில் ஒருவர் மட்டுமே இருக்கிறார். அவர் பொதுமக்களிடம் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துவதோடு சரி வேலையில் வேகம் காட்டுவது கிடையாது. காலை 8 மணிக்கு OP சீட்டு வழங்கப்படுகிறது. இந்த நீண்ட வரிசை நண்பகல் 12 மணி வரை நீடிக்கிறது. கொடுக்கப்படும் OP சீட்டை வாங்கிக் கொண்டு எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டால் 10வது நம்பருக்கு போ, 11 வது நம்பருக்கு போ என்று அவர்கள் அலட்சியத்துடன் பதில் கூறுகின்றனர். ஆனால், அந்த நோயாளியோ வழிதெரியாமல் திணறுகிறார்.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வேண்டிய அனைத்து மருந்து, மாத்திரைகள், ஊசிகள் இருப்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று அரசின் உத்தரவு. ஆனால் இங்கே, நோயாளிகளிடம் வெளியில் இருந்து மருந்து, மாத்திரைகள், ஊசிகளை டாக்டர்கள் வாங்க சொல்லி கட்டாயப்படுகிறார்கள். அறுவை சிகிச்சை செய்து கொண்ட கர்ப்பிணிகள் முதலில் தண்ணீர் போன்றவைதான் முதலில் சாப்பிட வேண்டும். இதை முதலில் பயன்படுத்தியபோது அவர்களுக்கு வாந்தி ஏற்பட்டால் உடனடியாக அந்த கர்ப்பிணியின் தாயார் செவிலியரிடமோ, டாக்டரிடமோ கூறினால் போ..போ வருகிறோம் என்று கூறிவிடுவதோடு தாமதமாகவே வருகிறார்கள். உடனடியாக ஊசி போட வேண்டும் என்றால் அங்கு ஊசி இல்லை, வெளியில் இருந்து வாங்கிக் கொண்டு வா என்று விரட்டுகின்றனர். மகளின் நிலைமையை பார்த்து தாயார் உடனடியாக வெளியில் உள்ள மருந்துகடைக்கு சென்று ஊசி, மருந்து, மாத்திரைகள் வாங்கி வருகின்றனர். அதன் பிறகே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செவிலியர் ஊசி போடுகிறார்.
webdunia photo
WD
webdunia photo
WDwebdunia photo
WDதிருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இருக்கும் அவலத்தை தமிழக அரசு உடனடியாக கவனிக்க வேண்டும். ஏழை நோயாளிகளிடம் பணம் பறிக்கும் ஊழியர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். அலட்சியத்துடன் நடந்து கொள்ளும் டாக்டர்கள் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தனை குறைபாடுகள் இருந்தும் இதனை கண்டும் காணாமல் இருக்கும் மருத்துவமனை கண்காணிப்பாளர் சேகர் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதுதான் பாதிக்கப்பட்ட மக்களின் கேள்வியாக இருக்கிறது.
அரசுக்கு நல்ல பெயர் வேண்டுமென்றால் முதலில் மருத்துவமனைகளில் இருக்கும் இப்படிப்பட்ட அவல நிலையை உடனடியாக களைய வேண்டும் என்பதே பொதுமக்களின் வலியுறுத்தலாக இருக்கிறது.
