2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக (முன்னாள்) அமைச்சர் ஆ.இராசா கடைபிடித்த ‘கொள்கை’யை உருவாக்கியபோது ஆட்சியில் இருந்தது பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணியே. அந்தக் கொள்கையை பயன்படுத்தி அவர்கள் ஆட்சிக் காலத்திலும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு (எந்த கட்டணமும் பெறாமல் உரிமம் வழங்கப்பட்டதென்று இராசா எதிர்க்குற்றம் சாற்றுகிறார்) இதோபோல் முறைகேடாக செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் ‘எல்லாம் அறிந்த’ தமிழக முதல்வர் கருணாநிதி கூட, 2001ஆம் ஆண்டிலிருந்தே விசாரணை நடத்தினால் அதற்குத் தாங்கள் தயார் என்று கூறியுள்ளார்!