காஷ்மீர் பிரச்சனையை ஐ.நா.விற்கு கொண்டு சென்றதன் மூலம் அது சர்வதேச பிரச்சனையாக்கப்பட்டுவிட்டது. அதனால் மூன்றாவது நாட்டின் அல்லது நாடுகளின் தலையீட்டிற்கு அது வழிகோலிவிட்டது என்றும், அதன் காரணமாகவே இன்று வரை அப்பிரச்சனைக்கு நம்மால் தீர்வு காண முடியவில்லை என்றும் பாரதீய ஜனதா கட்சி பலமுறை கூறிவந்துள்ளது.