ஜெனிவாவில் நடைபெற்றுவரும் உலக வர்த்தக கூட்டமைப்பின் (WTO) உறுப்பு நாடுகளின் வர்த்தக அமைச்சகர் மாநாட்டில், மிக முக்கியத்துவம் வாய்ந்த தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஒரே நாளில் இந்தியா அந்தர் பல்டியடித்து அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வசதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது விவரம் தெரிந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.