அமெரிக்காவுடன் செய்துகொண்ட அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற இடதுசாரிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், ஒப்பந்தமா? அல்லது ஆட்சியா? என்பதை முடிவெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது மன்மோகன் சிங் அரசு.