தமிழரின் வாழ்விலும், வரலாற்றிலும் பிரிக்க முடியாத பண்பாட்டு அங்கமாக ஜல்லிக்கட்டு திகழ்கிறது. மஞ்சு விரட்டு என்றும் அழைக்கப்படும் இந்த மைந்து விரட்டு பொங்கல் கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக இருந்துவருகிறது.