எல்லா விளையாட்டிற்கும் ஊக்கமளிக்க வேண்டும்!
|
முதல் முறையாக நடைபெற்ற இருபதுக்கு20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி ஒவ்வொரு போட்டியிலும் மிகச் சிறப்பாக விளையாடி சாம்பியன் கோப்பையை வென்றதற்காக அவர்கள் மீது பரிசு மழை பொழிவதை யாரும் எதிர்க்கப் போவதில்லை.
|
இவைகள் மட்டுமின்றி, தமிழக அரசு உட்பட ஒவ்வொரு மாநில அரசும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு 5 லட்சம், 10 லட்சம் என்று அள்ளித் தெளித்தன. இவையாவும் அவர்கள் ஆடிய ஆட்டத்திற்கு பாராட்டாகவும், இப்படியே தொடர்ந்து ஆடவேண்டும் என்று ஊக்குவிக்கவும் வழங்கப்பட்டது. ஆனால் அதுவே தற்பொழுது வேறொரு பிரச்சனையை கிளப்பியுள்ளது.
கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமைகளும், பரிசுகளும் அதே அளவிற்கு நமது நாட்டின் பெருமைகளை உயர்த்திய மற்ற விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படாதது ஏன் என்பதே அந்தக் குமுறல்.
|
ஆனால், அந்த வெற்றியைப் பெற்றுத் தந்த வீரர்களுக்குப் பாராட்டும், பரிசுப் பண மழையும் பொழியவில்லை. இந்த மனப்பான்மையை கடுமையாக சாடியுள்ளார் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் கர்வாலோ.
கிரிக்கெட்டிற்கு காட்டப்படும் அந்தச் சலுகையும் கருணையும், ஹாக்கி உள்ளிட்ட மற்ற விளையாட்டு வீரர்களுக்கு காட்டப்படாதது ஏன் என்று உறுமிய கர்வாலோ, இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையைக் கண்டித்து ஹாக்கி வீரர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் எச்சரித்தார். அதற்குப் பலனும் கிடைத்துள்ளது.
கர்நாடகத்தைச் சேர்ந்த இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு ரொக்கப் பரிசு அறிவித்த அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி, கர்வாலோவின் குமுறலைக் கண்டு ஹாக்கி வீரர்களுக்கும் ரொக்கப் பரிசு அறிவித்தார். இன்று, மேலும் ஒரு நல்ல செய்தியாக, ஹாக்கி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று பாரத அரசு வங்கி அறிவித்துள்ளது.
|
|
|
இருந்தாலும், அரசும், விளையாட்டு கூட்டமைப்புகளும் அந்த வீரர்களை (கிரிக்கெட் வாரியம் செய்வதைப் போல) நன்கு பெருமைப்படுத்தியிருக்க வேண்டும். இந்திய அரசு அர்ஜூனாவில் இருந்து ராஜீவ் கேல் ரத்னா வரை விருதுகள் வழங்கி கெளரவிக்கிறது. ஆயினும், ரொக்கப் பரிசும் வழங்குவது அவர்களின் திறனை மெச்சுவதாகவும், அதனை அங்கீகரித்து ஊக்குவிப்பதாகவும் அமையும்.
தமிழ்நாட்டிலும், ஆந்திரத்திலும், மராட்டியத்திலும் அற்புதமான கேரம் விளையாட்டு வீரர்கள் இருந்தார்கள், இருக்கின்றார்கள், உருவாகி வருகிறார்கள். டெல்லி, மரியா இருதயம், புண்ணியக்கோட்டி, ராதாகிருஷ்ணன், அந்தோணிராஜ் ஆகியவர்களின் ஆட்டம் நம்மை மெய்மறக்கச் செய்யும். ஆனால், அவர்களின் திறனிற்கு கிடைத்ததெல்லாம் சராசரி எழுத்தர் வேலையும், வெற்றிக் கோப்பையும், மெடல்களும்தான். ரொக்கப் பரிசென்று ஏதும் அளிக்கப்படாததால் அந்த முன்னாள் சாம்பியன்களின் வாழ்க்கை இன்று வரை சந்துகளுக்கு அமைந்துள்ள எலிக் கூண்டு வீடுகளில்தான் முடங்கிக் கிடக்கிறது.
இந்த நிலை மாறவேண்டும். மாநில அளவில், தேச அளவிலும், சர்வதேச அளவிலும் வெற்றி பெறும் வீரர்களுக்கு மாநில அரசுகளும், மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறையும், இந்திய ஒலிம்பிக் சங்கமும் ஒரு குறிப்பிட்ட ரொக்கப் பரிசை நிர்ணயித்து அளிக்க வேண்டும். கிரிக்கெட் வாரியத்திற்கு இணையாக அவ்வளவு பெரும் தொகை வழங்க முடியாது என்றாலும், அவர்களின் வாழ்நிலை உயரக்கூடிய அளவிற்கு அந்த ரொக்கப் பரிசுகள் இருக்க வேண்டும்.
