தமிழ்நாட்டில் இயங்கிவரும் சுயநிதி பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் மாணாக்கர்களிடம் வசூலித்து வரும் கட்டணமும், மற்ற நன்கொடைகளும் இன்றைக்கு அரசியல் பிரச்சனையாக்கப்பட்டு ஆளும் கூட்டணிக்குள் விரிசல் ஏற்படுமோ என்று எண்ணுமளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது! tn.gov சுயநிதி கல்லூரிகளின் நிர்வாகங்கள் மாணவர்களிடம் கல்விக் கட்டணமாகவும், கட்டட நிதி, அந்த நிதி, இந்த நிதி என்று ரசீது கொடுக்காமல் அடித்துவரும் கொள்ளை ஊரறிந்த உண்மையாக இருந்துவரும் நிலையில், அதற்கு ஆதாரம் அளித்தால் நடவடிக்கை எடுப்போம்...