1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. வணிகம்

சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிவு

சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிவு
சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகளிலும் ஏற்பட்ட சரிவினால் மும்பை பங்குச் சந்தை குறியீடு 500 புள்ளிகளையும் நிப்டி 125 புள்ளிகளையும் இழந்தன.

டோ ஜூன்ஸ் குறியீடு 350 புள்ளிகளும், நாஸ்டாக் 56 புள்ளிகளும் குறைந்ததைத் தொடர்ந்து சர்வதேச சந்தைகளில் இன்று சரிவு ஏற்பட்டது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டை நிர்ணயிக்கும் 30 பங்குகளில் எச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ, ஐடிசி, டிசிஎஸ், டாடா ஸ்டீல், விப்ரோ, ஏசிசி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்டால்கோ, அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகியவற்றின் பங்குகளின் விலைகள் குறைந்தன. வங்கிகளின் பங்குகளே பெருமளவிற்கு அடிபட்டது.

மும்பை பங்குச் சந்தை குறியீடு 14,590 ஆகவும், தேசப் பங்குச் சந்தை குறியீடு 4,277 ஆகவும் உள்ளன.