1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்

நிலக்கரி உற்பத்தி அ‌திக‌ரி‌ப்பு

இந்திய நிலக்கரி நிறுவனம் சிங்கரேனி சுரங்க நிறுவனம்
கட‌ந்த நவ‌ம்ப‌ர் மாதத்தில் இந்திய நிலக்கரி நிறுவனமும், சிங்கரேனி சுரங்க நிறுவனமும் சேர்ந்து 39.49 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளன.

இந்த மாதத்திற்கான உற்பத்தி இலக்கு 39.09 மில்லியன் டன். கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த நிறுவனங்கள் 36.6 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்தன.

கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் உற்பத்தி 7.9 விழுக்காடு அதிகரித்துள்ளது. மின் உற்பத்தி துறைக்கு சென்ற மாதத்தில் 28.279 மில்லியன் டன் நிலக்கரியும் விநியோகிக்கப்பட்டது எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
About Writer
Webdunia