புது டெல்லி : சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவின் காரணமாக நமது நாட்டின் நிதிச் சந்தையி்ல் ஏற்பட்டுள்ள ரொக்க நெருக்கடியைத் தளர்த்த வங்கிகளின் ரொக்க இருப்பு விகதத்தையும், குறைந்த கால கடன் மீதான வட்டியையும் இந்திய மைய வங்கி (ஆர்.பி.ஐ.) மேலும் குறைக்க வேண்டும் என்று பொருளாதார அமைப்பான ஐ.இ.ஜி. கோரிக்கை விடுத்துள்ளது.