டோக்கியோ: இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் 21 ஆம் நூற்றாண்டு சாதகமானது என்ற கணிப்பை வெளியிட்ட பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின் மீது நம்பிக்கை வைத்து, முதலீடு செய்யுமாறு ஜப்பானைச் சேர்ந்த தொழில் மற்றும் வர்த்தக பிரமுகர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தார்.