வியட்நாமில் நீர்மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் பெற்றுள்ளதாக பாரத் மிகு மின் நிலையம் (பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்) அறிவித்துள்ளது. வியட்நாம் தலைநகர் ஹனாயில் இருந்து வடக்கில் 350 கி.மீட்டர் தொலைவில் உள்ள முனாங் லா மாவட்டத்தில் இரண்டு 100 மெகாவாட் திறன் மின் உற்பத்தி செய்யும் நீர் மின் நிலையங்களை பாரத் மிகு மின் நிறுவனம் அமைக்கும். இவை 2010 ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படும். இதன்...