1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்

ஹாங்காங்கில் யூனியன் வங்கி கிளை துவக்கம்!

ஹாங்காங் யூனியன் வங்கி
மத்திய அரசுக்கு சொந்தமான யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ஹாங்காங்கில் வங்கி கிளையை திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்து வங்கியின் மேலாண்மை இயக்குநர் எம்.வி.நாயர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹாங்காங்கில் வங்கிக் கிளையும், ஷாங்காயில் பிரதிநிதி அலுவலகத்தையும் திறக்கின்றோம். இதனால் அதிகரித்து வரும் இந்திய-சீன வர்த்தகத்தால் ஏற்பட்டுள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.

ஹாங்காங்கில் திறக்கப்படும் வங்கிக் கிளையில் பெரிய நிறுவனங்களுக்கும், தனிப்பட்டவர்களுக்கும் எல்லாவித வங்கி சேவைகளும் வழங்கப்படும்.
About Writer
Webdunia