ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளின் பாதிப்பு காரணமாக, இன்று இந்திய பங்குச் சந்தையில் காலையில் குறியீட்டு எண்கள் அதிகரித்தாலும், இதே நிலை நீடிக்குமா என்பது கேள்விக்குறியே. நேற்று பங்குகளை விற்பனை செய்த நிறுவனங்கள், இன்று வாங்கும். இதனால் அடிக்கடி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.