1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

சென்செக்ஸ் 361 -நிஃப்டி 106 புள்ளி உயர்வு

சென்செக்ஸ் நிஃப்டி
மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, ஏற்ற இறக்கத்துடன் துவங்கின. நண்பகல் 12 மணியளவில் சீராக குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 361.14 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 10,076.43 ஆக உயர்ந்தது.

இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 10 ஆயிரத்திற்கும் அதிகரித்தது.

நேற்று முன்தினமும் வர்த்தகம் நடகக்கும் போது சென்செக்ஸ் 10,000 க்கும் உயர்ந்தது. ஆனால் பிறகு ஏற்பட்ட சரிவால் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டியும் 3 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 106.40 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 3,060.75 ஆக உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 68.39, பி.எஸ்.இ 500- 123.59, சுமால் கேப் 0.91 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1490 பங்குகளின் விலை அதிகரித்தது. 966 பங்குகளின் விலை குறைந்தது. 91 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.




About Writer
Webdunia