1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

சென்செக்ஸ் 265-நிஃப்டி 74 புள்ளி சரிவு

சென்செக்ஸ் நிஃப்டி
மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், 11 மணியளவில் குறைய துவங்கின. பிறகு அதிகரித்த பங்குகளின் விலை, மதியம் 2 மணிக்கு பிறகு சீராக குறைந்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 264.44 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 8,965.20 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 73.60 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2,714.40 ஆக குறைந்தது.

மிட் கேப் 29.85, சுமால் கேப் 8.26, பி.எஸ்.இ 500- 74.86 புள்ளிகள் குறைந்தன.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 985 பங்குகளின் விலை அதிகரித்தது. 1104 பங்குகளின் விலை குறைந்தது. 71 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
About Writer
Webdunia