கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வந்து சேர்ந்துள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் தண்டோரா போட்டு எச்சரித்தனர்.