மஞ்சள் பயிரிடப்படும் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினால், மஞ்சள் உற்பத்தி பாதிக்கப்படும் என்று மும்பை வர்த்தகர்கள் கருதுகின்றனர். தமிழ்நாட்டில் ஈரோடு, ஆந்திராவில் உஸ்மான்பாத், நிஜாமாபாத், கர்நாடகத்தில் மைசூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவு மஞ்சள் பயிரிடப்படுகிறது. இந்த பகுதியில் பயிரிடப்படும் பரப்பளவு, பருவநிலையை பொறுத்தே உற்பத்தி இருக்கும். இங்கு உற்பத்தியாகும் அளவை கொண்டு மஞ்சள் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் மழை போதிய அளவு பெய்யாத காரணத்தினால், மும்பை முன்பேர...