1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. வேளாண்மை

மேட்டூர் : பாசனத்திற்கு நீர்விடுப்பு குறைப்பு!

காவேரி மேட்டூர் அணை கன அடி ஆயிரம்
காவேரி பாசனப்பகுதியில் சென்ற இரண்டு நாட்களாக மழை பெய்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுவது குறைக்கப்பட்டது.

கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று காலை முதல் விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 104 அடியாக உள்ளது. அணையின் அதிக பட்ச உயரம் 120 அடி. அணைக்கு விநாடிக்கு 521 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.