புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறையில் விஞ்ஞானி வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!
புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறையில் (MNRE) விஞ்ஞானிகள் கிரேடு 'பி' பதவிக்கு (Scientists 'B') தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியாக உள்ள மொத்தம் 14 இடங்களுக்கு (3- ஓ.பி.சி., 2- எஸ்.சி., 1- எஸ்.டி. 8- பொது) தகுதியானவர்கள் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இருந்துப் பெறப்பட்ட அறிவியல் / கணிதம் / புள்ளியியலில் முதுகலைப் பட்டம் / இளநிலை பொறியியல் அல்லது தொழில்நுட்ப பட்டம் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆராய்ச்சி பிரிவில் அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கதாககும்.
இப்பணிக்கு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு பணியாளர்களுக்கு 5 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசு அவ்வப்போது வழங்கும் அறிவுரையின்படி வயதில் தளர்வு உண்டு.
இப்பதவிக்கான அடிப்படை சம்பளமாக 15,600-39,100 + 5,400 மற்றும் வழக்கமான இதர படிகளும் வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பு வெளியான 6 வாரத்துக்குள் "புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல அமைச்சகம், பிளாக் எண் 14 சி.ஜி.ஓ. வளாகம், லோடி சாலை, புதுடெல்லி - 110 003" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு நவம்பர் 29ஆம் தேதி வெளியான எம்ப்ளாய்மண்ட் செய்தி, ரோஜர் சமாஜார் இதழில் வெளியாகி உள்ள விளம்பரங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.