1. செய்திகள்
  2. »
  3. வேலை வழிகாட்டி
  4. »
  5. செ‌ய்‌திக‌ள்

சென்னையில் சர்வதேச கணித மாநாடு

சென்னை லயோலா கல்லூரி கணிதம் மற்றும் கணினி ஆராய்ச்சி மாநாடு இந்திரா ராஜசிங்
சென்னை லயோலா கல்லூரியில் சர்வதேச அளவிலான கணிதம் மற்றும் கணினி ஆராய்ச்சி குறித்த மாநாடு நாளை தொடங்குகிறது.

இதுகுறித்து லயோலா கல்லூரியின் கணிதத் துறை தலைவர் இந்திரா ராஜசிங் கூறுகையில், இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள மாநாட்டில், இந்தியா, ஈராக், பூடான் உள்பட பல நாடுகளிலும் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட கணிதம் மற்றும் கணினி அறிவியல் துறை நிபுணர்கள், விஞ்ஞானிகள் கலந்து கொள்ளவிருப்பதாகக் கூறினார்.

இதில் 160-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
About Writer
Webdunia