1. செய்திகள்
  2. »
  3. வேலை வழிகாட்டி
  4. »
  5. செ‌ய்‌திக‌ள்

ஜூலை 2வது வாரம் பி.வி.எஸ்.சி. தரவ‌ரிசை‌ பட்டியல்

பி.வி.எஸ்.சி. தரவ‌ரிசை‌ பட்டியல்
ஜூலை 2-வது வாரம் கால்நடை மருத்துவப் படிப்புக்கான (பி.வி.எஸ்சி.) தரவ‌ரிசை‌ப் பட்டியல் வெளியிடப்பட்டு, ஜூலை 20-ம் தேதிக்கு மேல் கல‌ந்தா‌ய்வு நடைபெறும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.தங்கராஜு தெரிவித்தார்.

இது கு‌றி‌த்து அவ‌ர் தெ‌ரி‌வி‌க்கை‌யி‌ல், கால்நடை மருத்துவ அறிவியல் கல்விக்கான (பி.வி.எஸ்சி) மொத்த இடங்கள் 226. இதில் 34 இடங்கள் தேசிய ஒதுக்கீட்டிற்கு போக, மீதமுள்ள 192 இடங்களுக்கு இதுவரை 1000 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
About Writer
Webdunia